உடலுக்கு ஆரோக்யமான பழங்களில் ஒன்றான பீட்ரூட்யை வைத்து அருமையாக சூப் செய்யலாம் வாங்க !!
தேவையான பொருட்கள் :
பீட்ரூட் = 1/2 கிலோ
எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
வெங்காயம் = 1 பெரிய பீஸ்
உருளைகிழங்கு = 1 பீஸ்
மிளகு தூள் = 1 ஸ்பூன்
புதினா இலை = 1 சின்ன கொத்து
எலுமிச்சை தோல் = 1/2 பீஸ்
மல்லி தழை = சின்ன கொத்து
செய்முறை : 1
பீட்ரூட் , உருளைகிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிவைக்கவும். எலுமிச்சை பழ தோலை துருவி வைக்கவும்.
செய்முறை : 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய பீட்ரூட், உருளைகிழங்கு, எலுமிச்சை தோல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 லிருந்து 15 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
செய்முறை : 3
இவை அனைத்தும் வெந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் இறுதியில் புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.