உடலுக்கு சத்தான, மிக சுவையான தக்காளி சூப் ரெடி!!

தேவையான பொருட்கள் :

தக்காளி பழம் = 1/4 கிலோ
பெரிய வெங்காயம் = 3 பீஸ்
எண்ணெய் = தேவையான அளவு
தண்ணீர் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
மிளகு தூள் = 1 ஸ்பூன்
மசாலா இலை = 2 பீஸ்
எலுமிச்சை = தோல் 1 பீஸ்
எலுமிச்சை சாறு = 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை = 1 சின்ன கொத்து
ஸெலரி இலை தண்டு = சின்ன கொத்து
சர்க்கரை = 1 ஸ்பூன்

செய்முறை : 1
வெங்காயம், தக்காளி, ஸெலரி இலை தண்டுகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் மற்றும் ஸெலரி இலை தண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்.

செய்முறை : 2
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, மசாலா இலை சேர்க்கவும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மிளகு தூள், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 30 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைக்கவும். 30 நிமிடம் கழித்து கீழே இறக்கி எலுமிச்சை தோல், எலுமிச்சை சாறையும் சேர்த்து, ஸெலரி இலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறலாம்.


Leave a Reply