5 பணக்காரர்கள் கையில் தான் தற்போது அதிமுக உள்ளது…. அதிமுக நிர்வாகி பரபரப்பு பேட்டி …

சென்னை சேத்துப்பட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேடி பிரபாகர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது தற்போது 5 பணக்காரர்கள் கையில் அதிமுக உள்ளது என்றும் முழுமையாக அந்த கட்சி அந்த பணக்காரர்களின் கையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார் 

அதிமுகவில் கூட்டு தலைமையாக எல்லோரும் இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும் அதிலும் இந்த கட்சி பணக்காரர்கள் கையில் இருக்கக் கூடாது என்றும்  அவர் தெரிவித்துள்ளார் 

ஒற்றுமையாக செயல்படலாம் என ஓபிஎஸ் கூறுவதில் என்ன தவறு என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ரோட்டுக்கு போய்விடக்கூடாது என்பதற்காக நான் இதை பேசவில்லை என்றும் அதிமுக தொண்டர்கள் ரோட்டுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகவே நான் இதை கூறுகிறேன் என்றான் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply