கட்சி ஆபீஸ பூட்ட யார் அதிகாரம் குடுத்தது …இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா…எடப்பாடியை விளாசிய ஓபிஎஸ்…

மதுரை ;

மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மதுரை மாநகர மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ் ,திருமங்கலம் திருப்பரங்குன்றம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய ஓ.  பன்னீர்செல்வம்,

” தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் எகுக்கையாக அதிமுக மாறியது கௌரவமான பொது குழுவில் சி.வி. சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல்.  

23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடந்த பொது குழு கூட்டத்திற்கு என் வீட்டை  கடந்து காலை 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.  என்னை பொதுக்குழு கூட்டத்தில் வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி ஏழு இடங்களில் வரவேற்பு கொடுத்து செயற்கையான போக்குவரத்து ஏற்படுத்தினார் .

இதனால் போலீசார் உதவியுடன் கூட்டத்திற்கு செல்லும் நிலை எனக்கு ஏற்பட்டது.அதிமுக அலுவலகத்திற்கு சென்றபோது 200 இருக்கைகள் போட்டு அமர்ந்து தலைமை கழகத்தை பூட்டி வைக்கிறார்கள் .

இவர்களுக்கு யார் தலைமை கழகத்தை பூட்ட அதிகாரம் கொடுத்தது? இது யாரு வீட்டு  சொத்து எடப்பாடி பழனிசாமி அப்பன் வீட்டு சொத்தா? ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதி கொடுத்தார். இது அவர் கொடுத்த சொத்து பொதுக்குழு அங்கு நடக்கும் போது அங்க போகாமல் இவர்களுக்கு இங்கே என்ன வேலை ?நான் திருடி சென்று விட்டேன் என்று சொல்கிறார்கள். அதிமுக தலைமை அலுவலகம் எனது வீடு; சொந்த வீட்டில் யாராவது திருடுவார்களா?  தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஈபிஎஸ் மக்களை சந்திப்பாரா? என்றார்.

Leave a Reply