முதல்வர் வாகனம் முன்பு குடிபோதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்…அள்ளி கொண்டுபோன போலீஸ் …

சென்னை ;

முதல்வர் கான்வாய் வந்து கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் முதலமைச்சர் கான்வாய் சென்று கொண்டிருந்தபோது குடிபோதையில் இளைஞர் ஒருவர் ஸ்டண்ட் செய்துள்ளார்.

 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்,  திடீரென முதலமைச்சரின் கான்வாய் முன்னிலையில் ஸ்டண்ட் செய்ததால் அவர்   உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட 20 வயதான நபர் சென்னை ராயப்பேட்டையை  சேர்ந்த சுஜய் என்பது தெரியவந்துள்ளது .

இவர் மீது அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply