கேரட் அல்வா பிடிக்காத ஆளே இல்லை , குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், சுவையான சத்தான கேரட் அல்வா ஈசியாக செய்யும் முறை……
தேவையான பொருட்கள் :
கேரட் = 1 கிலோ
பசும் பால் = 750 மில்லி ( 3/4 லிட்டர் )
நெய் = தேவையான அளவு
சர்க்கரை = 1 கிலோ
ஏலக்காய் = 50 கிராம்
முந்திரி = 100 கிராம்
திராட்சை = 100 கிராம்
கிராம்பு = 10 பீஸ்

செய்முறை : 1
முதலில் கேரட்டை சுத்தம் செய்து, துருவி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும். கிராம்பு மற்றும் ஏலக்காயை அரைத்து பொடியாக தயார் செய்து வைக்கவும்.
செய்முறை : 2
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி காய்ச்சவும். பின்பு கேரட் துருவளை சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் வற்றும் நிலை வந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும். அல்வா பதம் வந்ததும் நெய் ஊற்றி கலக்கவும்.
செய்முறை : 3
பின்னர் ஏலக்காய், கிராம்பு பொடி சேர்க்கவும். அல்வா திரண்டு வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து லேசாக கிளறவும். பரிமாறும் பாத்திரத்தில் நெய் கொஞ்சம் ஊற்றி தடவி தயாராக உள்ள கேரட் அல்வா வை பாத்திரத்தில் மாற்றவும். முந்திரி, திராட்சை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.