ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி”- சத்குரு

சத்குரு அவர்கள், 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது குறித்து சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை சந்தித்ததில் மிக்க பெருமை & பெருமிதம். ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

சத்குரு அவர்கள் சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு பயணத்தில் 30,000 கிலோமீட்டர்கள் தனி நபராக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அதில் பல நாடுகளின் தலைவர்களையும், இந்திய பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஆதரவையும மண் காப்போம் இயக்கத்திற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.