காசுக்காக இயேசுபிரானை காட்டிகொடுத்த யூதாஸை போன்றவர் தான் ஜெயகுமார் …விளாசி தள்ளிய புகழேந்தி…

சென்னை ;

ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஊழல்வாதி, மிகப்பெரிய பணக்காரர் என்று ஓபிஎஸ் மீது  குற்றம் சாட்டும் ஜெயக்குமாரின் வீடு டுமில் தெருவில் தொடங்கி அடுத்த தெருவில் முடிகிறது. இதற்கு பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயக்குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. நீயே ஒரு குற்றவாளி அடுத்தவர்கள் பழி சொல்வது ஏன்? தங்களை கைது செய்யக்கூடாது என்பதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் காலில் விழுந்தும் எடப்பாடியும்  ஜெயக்குமாரும் கட்சியை பிளவு படுத்தியும் உள்ளனர்.

ஒரு காலத்தில் ஓபிஎஸ் உடைய காலை பிடித்து மேலே வந்தார் ஜெயக்குமார். கட்சி ஒன்றுபட்டாலும் ஜெயக்குமாருக்கு இனி கட்சியில் இடமில்லை. காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் போன்று தான் ஜெயக்குமார். செய்தியாளர் சந்திப்பில் தனிப்பட்ட நபரின் விஷயங்களை பேசக்கூடாது ஜெயக்குமார் பேசக்கூடாது. 

வரும் தீர்ப்பு நாடு போற்றும் நல்ல தீர்ப்பாக இருக்கும், அம்மாவால் அடையாளப்படுத்தப்பட்ட ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை நடத்த முடியாது. ஊழலில் ஈடுபட்டவர்களை முதலமைச்சரின் இன்னும் கைது செய்யாதது வேதனை அளிக்கிறது,

அம்மா வைத்த பொதுச்செயலாளர் பதவியை வகிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தற்போது அதனை பெற துடிப்பது ஏன்?ன்திமுக மற்றும் பொது மக்களின் கருத்து கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. அதனால் தான் ஓபிஎஸ் எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கிறார். 

கொடநாடு கொள்ளை வழக்கில் அரசு உடனடியாக முடிவு வெளியிடப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் தமிழக முழுவதும் நடைபெறும். எடப்பாடி ஓபிஎஸ் உடன் இணைந்து வாழ வேண்டும், அப்படி இல்லை என்றால் வெள்ளையனே வெளியேறு என்பது போல அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது எங்களது உறுதிமொழியாக இருக்கும்” எனக் கூறினார்.

Leave a Reply