சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நாங்க எதிர்த்தோமா….யார் சொன்னது ? ஜகா வாங்கிய தமிழக அமைச்சர்…
மதுரை ;
எட்டு வழி சாலை திட்டத்தை நாங்கள் எப்போது எதிர்த்தோம் என்று கேட்டு திடீர் பல்டி அடித்திருக்கிறார் திமுக அமைச்சர் எ.வ. வேலு
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேரில் பார்வை இட்டு ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களின் பேசிய அமைச்சர் வேலுவிடம் எட்டு வழி சாலை திட்டம் குறித்த கேள்விக்கு, சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக கடந்த ஆட்சியின் போது விவசாயிகளை பொதுமக்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்னோம் .
கடந்த கால ஆட்சியில் எட்டு வழி சாலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசும் போது பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் என்று தான் சொன்னோம். நாங்கள் எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை என்றார்.
சட்டமன்றத்தில் எட்டு வழி சாலை திட்டத்தில் பொதுமக்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று தான் சொன்னோம். அது சட்டமன்ற அவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது. எட்டு வழி சாலை விவகாரம் என்பது ஒரு கொள்கை முடிவு . அது குறித்து அமைச்சர் முடிவெடுக்க முடியாது அரசாங்கம் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.