முட்டையில் பெப்பர் அதிகமா போட்டதற்காக ஹோட்டலை உடைத்து சூறையாடிய அதிமுக பிரமுகர்கள்… போலீஸ் வலைவீச்சு …..

சேலம் ;

சேலம் மாவட்டம் கெங்கவல்லி – தம்மம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் குமரேசன் ( 36 ) என்பவர் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் நான்கு பேரும் கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆஃப்பாயில் ஆர்டர் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் ஆர்டர் செய்த ஆஃப்பாயில் அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.

அதைச் சாப்பிட்ட அவர்கள் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்டபோது அவரையும் கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர் . பின்னர் கடையிலிருந்த மாவு, முட்டைகளைக் கீழே தள்ளிச் சூறையாடியுள்ளனர் .

இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் உணவகத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் ஓட்டலை சூறையாடிய அதிமுக, பிரமுகர்களான பிரவீன் , பிரபு , கௌதம் , நடராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply