திடீர் உடல்நல குறைவு .. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரன்…

தஞ்சாவூர்,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply