14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய கோவை – மதுரை ரயில் சேவை….பயணிகள் மகிழ்ச்சி ….

கோவை ;

கோவையில் இருந்து மதுரைக்கு நேரடியாக ரயில் சேவை இல்லாததால், கோவையில் இருந்து பழனிக்கு சென்று அங்கிருந்து இணைப்பு ரயில் மூலம் மதுரை செல்ல வேண்டும்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட கோவை – மதுரை ரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று நேற்று கோவை – மதுரை இடையேயான ரயில் சேவை துவங்கப்படும் என தென்னக ரயில் அறிவித்து இருந்தது.

அதன்படி, நேற்று கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொள்ளாச்சி திமுக எம்பி சண்முக சுந்தரம் கொடியசைத்து ரயில் சேவையை துவங்கி வைத்தார்.மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.45 மணியளவில் கோவை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.35 மணிக்கு மதுரையை வந்தடையும்.

14 வருடங்களுக்கு பிறகு கோவை – மதுரை இடையே நேரடி ரயில் சேவை துவங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், கோவையில் இருந்து போத்தனுர், கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு செல்ல நிர்ணயிக்கப்பட்டு உள்ள ரூ.30 கட்டணத்தை குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

Leave a Reply