எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளுக்கும் எங்கள கூப்பிடரதே இல்லை..குமுறிய கோவை அதிமுக எம்எல்ஏ-க்கள்… கலெக்டரிடம் புகார் மனு …

கோவை ;

கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன், வால்பாறை எம்எல்ஏ கந்தசாமி, சூலுர் எம்எல்ஏ  கந்தசாமி ஆகியோர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், தங்களது தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநகராட்சி நிர்வாகம் கூறியதை மீறி திமுகவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும், அவற்றை அகற்றாவிட்டால் தாங்களும் போஸ்டர்களை ஒட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோவையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என சந்தேகம் எழுவதாக கூறிய அவர்கள், இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், அரசு விழாக்களுக்கான அழைப்பிதழில்  தங்களது பெயர் உள்ளதாகவும், ஆனால் தங்களை அழைப்பதில்லை  என்றும் கூறினார். இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பிய அவர், தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளதாகவும், அவர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply