போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் பூத்தையே அடித்து உடைத்த இளைஞர்கள்… அதிர்ச்சி சம்பவம் …..

சென்னை ;

பாண்டி பஜார் வாணி மஹால் அருகே போலீஸ் பூத் ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை மது போதையில் வந்த இளைஞர்கள் சிலர், அந்த போலீஸ் பூத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் பூத்தைச் சுற்றி சாலைகளில் மழைநீர் வடிகால் கால்வாய் பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணிக்கு தேவையான கம்பி மற்றும் இதர இரும்பு பொருட்கள் சாலையின் ஓரங்களில் இருந்துள்ளது.

அப்போது அதிகாலையில் அங்கு மதுபோதையில் வந்த 10 பேர் அங்கிருந்த கம்பிகள் மற்றும் இரும்பு பொருட்களை திருட முற்பட்டுள்ளனர்.இதனைப் பார்த்த கட்டுமான பணி காண்ட்ராக்டர் லோகநாதன் என்பவர் இளைஞரை திட்டி அங்கிருந்து விரட்ட முற்பட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கான்ட்ராக்டர் லோகநாதனை தாக்க முற்பட்டு உள்ளனர். இதில் பயந்து போன காண்ட்ராக்டர் லோகநாதன் அருகில் உள்ள போலீஸ் பூத்தின் உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டார்.இதனால் அந்த இளைஞர்கள் லோகநாதன் வெளியே வரச் சொல்லி போலீஸ் பூத்தை கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து நொறுக்கி உள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 4 இளைஞர்களை தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply