நீங்க செத்து ஒரு வருஷம் ஆச்சு… முதியோர் உதவி தொகை வாங்க வங்கி சென்ற போது அதிகாரிகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெரியவர் ….

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் தில்ஹர் தாலுகாவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (வயது 70). இவர், இறந்து விட்டதாக ஓராண்டுக்கு முன்பு அரசு ஆவணங்களில் அதிகாரிகள் அறிவித்து விட்டனர்.

அதை அறியாமல் அவர் முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு சென்றபோது, அவர் இறந்து விட்டதாக அவரிடமே வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அப்போதிருந்து, தான் உயிருடன் இருப்பதை அதிகாரிகளிடம் நிரூபிக்க அவர் போராடி வருகிறார். தனது கரும்புக்கு சர்க்கரை ஆலை, தனது வங்கிக்கணக்கில் செலுத்திய பணத்தைக் கூட தன்னால் எடுக்க முடியவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

முதியோர் உதவித்தொகையும் கிடைக்காததால், செலவுக்கு பணமின்றி திண்டாடுவதாக கூறினார். அவரது சோகக்கதையை கேட்ட தில்ஹர் தாசில்தார் ஞானேந்திர சிங், முதியவரின் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி, தவறு சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Leave a Reply