திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் புறப்பாடு!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவையொட்டி மதுரையில் நடைபெறும் புட்டு திருவிழாவில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் ஒவ்வொரு ஆண்டும் மதுரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆவணி மூல திருவிழாவை முன்னிட்டு நாளை புட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் தெய்வானையுடன் இன்று காலை மதுரைக்கு பல்லக்கில் புறப்பட்டார்.
சுவாமி பல்லக்கு வரும் வழிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனால் சுவாமி வரும் வழிகள் திருவிழாகோலம் பூண்டிருந்தது.

Leave a Reply