விராட் கோலியின் பேட்டிங் சூப்பராக இருந்தது – கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்!!

துபாய்:
பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

பாகிஸ்தானிடம் மோதும் ஆட்டம் எப்போதுமே அதிகமான நெருக்கடி கொண்டதாகும். பாகிஸ்தான் வீரர்கள் ரிஸ்வான், நவாஸ் சிறப்பாக ஆடினார்கள். அவர்களது பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்தது.

விராட் கோலியின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. அவரது ஆட்டத்தால்தான் 181 ரன்னை எடுக்க முடிந்தது. மிடில் ஓவரில் விக்கெட் சரிந்தது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “ரிஸ்வான்-நவாஸ் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் திருப்பு முனை. சுழற் பந்தை எதிர்கொள்வதில் நவாஸ் கெட்டிக்காரர் என்பதால் முன்னதாக அவரை களம் இறக்கினோம்” என்றார்.

Leave a Reply