அமெரிக்காவின் எதிரியே அதிபர் ஜோ பைடன் தான்: ட்ரம்ப் விமர்சனம்!!

அமெரிக்காவின் எதிரியே அதிபர் ஜோ பைடன் தான் என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட டிராம் பேசியபோது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அமெரிக்க சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை சில வாரங்களுக்கு முன்பு நடந்ததே உதாரணம்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார், மோசமான வெறுக்கத்தக்க வகையில் அமெரிக்க அதிபர் பேசி வருகிறார். அவர் இந்த நாட்டின் எதிரி என்று கூறியுள்ளார்.


முன்னதாக எப்பிஐ அதிகாரிகள் டிரம்ப் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர் என்றும் வெள்ளை மாளிகையிலிருந்து அவர் வெளியேறும் போது சில ஆவணங்களைக் கொண்டு சென்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாகவும் கூறப்பட்டது.

Leave a Reply