சுவையான தக்காளி இனிப்பு பச்சடி!!

தேவையான பொருட்கள் :

பழுத்த சிவப்பான தக்காளி = 4 பீஸ் சின்ன
பீட்ரூட் = 1 பீஸ்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் = 1/4 கப்
ரோஸ் எசன்ஸ் = 1 ஸ்பூன்
(அ) ஏலக்காய்தூள் = 1/2 ஸ்பூன்
சர்க்கரை = 3/4 கப்
ரோஸ் கலரிங் பவுடர் =1/4 ஸ்பூன்
பேரிச்சம்பழம் = 10 பீஸ்

செய்முறை : 1
பீட்ரூட்டின் தோலைச் சீவி துருவிக் கொள்ளுங்கள். பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் ஒருதக்காளியைக் கொதிக்கும் வெந்நீரில் போட்டுத் தோலை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மீதம் உள்ள 3 தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து அதனுடன் பீட்ரூட் துருவலைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை : 2
இந்த விழுதை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடுங்கள். குழம்பு பதத்தில் வரும்போது 2 பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் தக்காளி, பைனாப்பிள், கலரிங் பவுடர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியில் எசன்ஸ் (அ) ஏலத்தூள் சேருங்கள். பிரெட், சப்பாத்திக்கு பிரமாத ருசிகூட்டும்.

இந்த தக்காளி இனிப்பு பச்சடி ( Tomato sweet pachadi ) பிரியாணி, சப்பாத்தி, பிரட் ஆகியவற்றிற்கு அருமையானது.

Leave a Reply