வெண்டைக்காய் மசாலா ஒருமுறை இப்படி செஞ்சுப் பாருங்க!!

தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் = 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
பொட்டுகடலை மாவு = 50 கிராம்
மஞ்சள் தூள் = 50 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
தனியா தூள் = 2 ஸ்பூன்
மிளகு தூள் = 1/2 ஸ்பூன்

செய்முறை : 1
முதலில் வெண்டைக்காயை சுத்தம் செய்து, நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும்.

செய்முறை : 2
இந்த கலவையை நறுக்கிய வெண்டைக் காயினுள் வைத்து பேக் செய்து, வெண்டைக்ககாயின் வெளிப்புரத்திலும் தடவி 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்த வெண்டைக்ககாய்களை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.

Leave a Reply