ஈசியாக, கேரட்யை பயன்படுத்தி சத்தான கேரட் பொரியல் செய்யும் முறை!!

தேவையான பொருட்கள் :

கேரட் = 1/4 கிலோ
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
துவரம் பருப்பு = 100 கிராம்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
தக்காளி = 100 கிராம்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
தேங்காய் = 1/2 மூடி
கொத்தமல்லி தழை = ஒரு சின்ன கொத்து

செய்முறை : 1


முதலில் கேரட்டை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும், தேங்காயை துருவி, அதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

செய்முறை : 2


பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும், இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், இவை வதங்கியதும் நறுக்கி வைத்த கேரட் துண்டுகள், துவரம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வேக விடவும். அனைத்து பொருட்களும் வெந்ததும், கீழே இறக்கி, இறுதியில் மல்லிதழை தூவி பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction