சுவையான வாழைப்பூ கூட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ = 1 பீஸ்
துவரம் பருப்பு =1 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
பைத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்

செய்முறை : 1


முதலில் துவரம் பருப்பு,பைத்தம் பருப்பு,மிளகாய் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து,சிறிதாக நறுக்கி வைக்கவும்.

செய்முறை : 2


பருப்பு மற்றும் மிளகாய் ஊரியதும் கொஞ்சம் சீரகம்,துருவிய தேங்காய்,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வாழைப்பூவை போட்டு வதக்கவும்.

செய்முறை : 3


வதக்கிய வாழைப்பூவுடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்க்கவும், இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.சிறிது நேரத்தில் இறக்கி பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction