சீனா பொம்மைகள் ,சீனா பட்டாசுகள் மட்டுமல்ல சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான்…. கோவையில் வெடித்த H. ராஜா …

கோவை ;

கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருக்கும் தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய உறுப்பினர் எச்.  ராஜா பங்கேற்றார்.  

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை ஏற்ற இந்த ஊர்வலத்தில் எச். ராஜாவும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.அப்போது,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கூடினோம் கலைந்தோம் என்று இல்லாமல் வீடு வீடாக சென்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நபர் இன்னொரு முறை வந்து விடக்கூடாது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் .  

பெரிய இயக்கமாக உருவாக வேண்டும் என்றார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன வைரசால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் போய்விட்டது.  

சீன வைரஸ் மட்டுமல்லாது சீன பொம்மைகள்,  சீனப்பட்டாசுகள் எல்லாமே ஆபத்தானது.   சீனா உற்பத்தி செய்து அனுப்பிய கம்யூனிஸ்ட் கட்சி வரை அனைத்துமே தரமற்றவை தான்.   கம்யூனிசம் என்று சொன்னாலே மக்களை கஷ்டத்தில் தள்ளுவது என்று கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக சாடினார்.

Leave a Reply