அனைவருக்கும் பிடித்த, சத்தான, சுவையான ஆப்பிள் அல்வா!!

தேவையான பொருட்கள் :

ஆப்பிள் = 1/4 கிலோ
பால் = 200 மில்லி
நெய் = 100 மில்லி
ஏலக்காய் = 50 கிராம்
முந்திரி,திராட்சை = 100 கிராம்
கேசரி பவுடர் = சிறிதளவு
சர்க்கரை = 400 கிராம்
கோதுமை மாவு = 200 கிராம்

செய்முறை : 1
முதலில் ஆப்பிளை துருவி வைக்கவும். ஏலக்காயை பொடியாக்கி வைக்கவும், கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை : 2
பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி, துருவிய ஆப்பிளை சேர்த்து வேகவைக்கவும். ஆப்பிள் நன்கு வெந்ததும், ஆப்பிளை கையினால் மசித்து விடவும். பின் கோதுமை மாவை கலந்து கரைத்து கேசரி பவுடர் கொஞ்சம் சேர்த்து கிளறவும்.

செய்முறை : 3
பின்னர் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரையும்வரை நன்கு கிளறவும். சற்று இறுகியதும் நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்பொடி சேர்த்து கிளறவும். நெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

Leave a Reply