சுவையான சத்தான கோதுமை கேசரி செய்யும் முறை!!

தேவையான பொருட்கள் :
கோதுமை = 1/2 கிலோ
சக்கரை = 3/4 கிலோ (750 கிராம் )
நெய் = 1/4 லிட்டர்
ஏலக்காய் = 5 பீஸ்
தண்ணீர் = 3/4 கிலோ (750 கிராம் )
முந்திரி = 50 கிராம்
திராட்சை = 50 கிராம்
கேசரி பவுடர் = 20 கிராம்

செய்முறை : 1
முதலில் பாத்திரத்தில் நெய் ஊற்றி,நெய் சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.ஏலக்காய்யை பொடியாக்கவும்.

செய்முறை : 2
கோதுமை மாவை மிதமான தீயில் வறுத்து வைக்கவும், பிறகு பாத்திரத்தில் சக்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி அதனுடன் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.சக்கரை கரைந்து, சக்கரை பாகு திக்காகும் வரை அப்படியே கொதிக்க வைக்கவும்.

செய்முறை : 3
பின்னர் இந்த சக்கரை பாவுடன் வறுத்த கோதுமை மாவை சேர்த்து கட்டி ஆகாமல் கிளறவும்.தண்ணீர் வற்றி நெய் பிரிந்து, மாவு நன்கு வேகும் வரை கிளறவும்.வெந்தவுடன் வறுத்து வைத்த முந்திரி,திராட்சை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து இறக்கி பரிமாறும் பாத்திரத்தில் வைக்கவும்.

Leave a Reply