இன்று வாமன ஜெயந்தி: மகாவிஷ்ணுவுக்கு விரதம் இருக்க உகந்த நாள்…

இன்று வாமன ஜெயந்தி (புதன்கிழமை) மகாவிஷ்ணுவுக்கு மிகச் சிறந்த உகந்த தினம்!!
இன்று (புதன்கிழமை) மகாவிஷ்ணுவுக்கு மிகச் சிறந்த உகந்த தினமாகும். ஏனெனில் வாமன அவதாரம் நிகழ்ந்த தினமாகும். எனவே இன்று பெருமாளை வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெற முடியும். இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சந்நிதி இருக்கக் கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும்.

வாமன அவதாரத்தை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாகும். வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை. அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமன அவதாரம் போற்றப்படுகிறது.

Leave a Reply