உலகில் எங்குமே பார்க்க முடியாத அருமையான கழிவறை…… வாங்க.. வாங்க.. அன்புடன் அழைக்கிறது கோவை மாநகராட்சி…

கோவை புலியகுளம் பகுதியில் கோவை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட கக்கூஸில் ஒரே அறைக்குள் இரு டாய்லெட் கோப்பைகளை வைத்து மனசாட்சி இல்லாமல் கட்டியுள்ளனர்.. அதுவும் பிரதம மந்திரி யின் நிதியில்…

கதவுகள் கூட இல்லாத நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பராமரிப்பு பணிக்காக என்று ஒரு தொகையை யும் ஒதுக்கி உள்ளார்களாம்…இது போன்ற கக்கூஸில் தான் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மலஜலம் போவார்களோ…இந்த மாதிரி கழிவறைகள் இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாது…

இந்தியாவிற்கே ஊழல் செய்வது எப்படி என்று பாடம் எடுத்துள்ளனர் நமது கோவை மாநகராட்சி அதிகாரிகள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்…

Leave a Reply