“ரோடு டூ ஸ்கூல்” திட்டத்தின் அடுத்த கட்டமாக “ரோடு டூ லைவ்லிஹுட்” அசோக்லேலண்ட் அறிமுகம்..!!

ஓசூர்,

அசோக் லேலண்ட் மக்கள் நலனுக்கான சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த
நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துகிறது.

இந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தி நிறுவனமுமான அசோக் லேலண்ட் லிமிடெட் தனது பெரு நிறுவன சமுகப்பொறுப்புணர்வு சார்ந்த முன் முயற்சிகளை சமூக அக்கறையுடன் மேலும் விரிவுப்படுத்தி இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் ’ரோட்டுஸ்கூல்’ திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் ‘ரோட்டு லைவ்லிஹுட்’ என்னும் முன் முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ரோட்டு லைவ்லிஹுட்’ முன் முயற்சியானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை மையமாகக்கொண்டு அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.

இம்மாணவர்களின் பள்ளி இறுதி தேர்வுகளுக்கு பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலான வாய்ப்புகளுக்கு அவர்களை தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கான பாதையில், அவர்களுக்கு வழிக்காட்டும் ஒரு முன்முயற்சியாக இது செயல்படுத்தப்படும்.

ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறன்களை மேம்படுத்தும் பயிற்சி, வேலை வாய்ப்பு திறன்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில்மற்றும்வேலைவாய்ப்புகளுக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பயிற்சிகளை இம்மாணவர்கள் பெறுவார்கள்.

திருவள்ளூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 133 பள்ளிகளில் இத்திட்டம் இம்மாதம் முதல் செயல்படுத்தப்படும்.தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ள தளியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் கே. நந்தகுமார் ஐஏஎஸ். என்.வி.பாலச்சந்தர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சி எஸ்ஆர் மற்றும் கார்ப்பரேட் விவகாரப்பிரிவின் சார்பாக என்.வி.பாலச்சந்தர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது,

“எங்களது’ரோட்டுஸ்கூல்’ திட்டம், தங்களுக்கான வாய்ப்புகளை பெறமுடியாமல் பின் தங்கியிருக்கும் சமூகங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக சமத்துவத்தையும், அனைவருக்குமான கல்வியையும் வெற்றிகரமாக பெற்று தந்துள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் அத்தியாவசிய தேவையான அறிவு மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளைக் கொண்ட “ரோட்டு லவ்லிஹுட்” திட்டத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முன்முயற்சி மாணவர்களுக்கு சிறந்த வாழ்வாதார வாய்ப்புகளைப் பெற உதவும் என்றும், மாணவர்களின் தேவைகளை பொறுத்து வடிமைக்கப்பட்ட ஆலோசனைகள் வேலை வாய்ப்புகளில் சிறந்தவற்றை மேற்கொள்ள உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.’’ என்றார்.

Leave a Reply