ஓணத்தை முன்னிட்டு “கோகுலம் பார்க்” ஹோட்டலில் சிறப்பு உணவு திருவிழா…

கோகுலம் பார்க் ஹோட்டலில் ஓணம் விழாவை முன்னிட்டு சிறப்பு உணவுத்திருவிழா. கோவை அவிநாசி சாலையில் உள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு திருவிழா நடைபெற்றது.

ஓணம் விழாவை முன்னிட்டு ஹோட்டல் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கேரளா மாநில பாரம்பரிய உடைகள் அணிந்து ஓட்டல் பணியாளர்கள் விருந்தினர்களை வரவேற்று அனைவருக்கும் கேரளா உணவு வகைகளை பரிமாறினார்கள்.

33 வகையான ஓணம் விழா உணவு வகைகளை விருந்தினர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

இந்த விழா கோகுலம் குரூப் மேலாளர் நீனா கிஷோர், ஹோட்டல் மேலாளர் சீனிவாசன், தலைமை ‘செப்’ அருள்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply