கேளுங்கள் தரப்படும்

இறைவனிடம் நம் தேவைகளுக்காக நாம் வேண்டலாம். நாம் இறைவனிடம் ஏதேனும் ஒன்றைக் கேட்டுப் பெறுவது எப்படி என்பது குறித்து மகான் யோகானந்தர் காட்டும் வழி முறைகளைப் பற்றி அறிந்து கொள்வோமா?

*வேண்டத் தக்கவற்றை மட்டுமே வேண்ட வேண்டும்.
*யாசிக்கும் பாங்கில் வேண்டக் கூடாது.

  • நாம் யாவருமே இறைவனின் குழந்தைகள். பிள்ளைக்குத் தந்தை ஒருவன். நம் எல்லோருக்கும் தந்தை இறைவன். இந்த மெய் உணர்வுடன் வேண்டுவது மிகுந்த பலன் தரும். ஆகவே இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவினைப் புரிந்து கொண்டு, உரிமையை நிலை நாட்டி வேண்ட வேண்டும்.

” இறைவா! நான்‌உனது குழந்தை. நீ எனது தந்தை. நீயும் நானும்‌ ஒன்று”என ஆழ்ந்தும், இடையறாதும் வேண்ட வேண்டும் என்கிறார், பரமஹம்சயோகானந்தர்.

இவ்வாறு நமது வேண்டுதல் தொடரும் வேளை, அனைத்தையும் திருப்தி செய்யும் ஆனந்தத்தை நம்முள் உணரலாம்.அப்பொழுது தெய்வத் தந்தையிடம், ” இறைவா! இது‌ எனது தேவை.இதனைப் பெறுவதற்காக நான் உழைக்கத் தயாராக இருக்கிறேன். இதனை அடைய என்னுள் வெற்றி தரும் சிந்தனைகள் தோன்றவும், அச்சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரவும் என்னை வழி நடத்து.

நான் தளராத மன உறுதியுடன் உழைப்பேன். எனது விவேகத்தையும், செய்கைகளை யும் வழி நடத்து”. என வேண்டுதல் வேண்டும்.

“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.எனவே நமக்கு அவசியமானஸ உலகத் தேவைகளுக்காக ஆண்டவனை வேண்டுவது தவறு இல்லை. ஆனால் வாழ்வின் குறிக்கோளை எய்த “இறைவா! நீயே எனக்கு வேண்டும் என அழுது அடம் பிடிக்கும் குழந்தையாக மாற வேண்டும்” என்கிறார் மகான் யோகானந்தர். எனவே இறைவனிடம் இறைவனையே கேட்போம். பிறவிப் பெருங் கடலைக் கடப்போம்.

தகவல்:
யோகதா சத்சங்க தியான கேந்திரம்,கோயமுத்தூர்.
90806 75994

Leave a Reply