அதிமுக எம்எல்ஏக்களே எடப்பாடியோட பேசறதில்லை…இந்த லட்சணத்துல எங்க எம்எல்ஏக்கள் உங்க கூட பேசுவாங்களா… எடப்பாடியை சாடிய முதல்வர் ஸ்டாலின்.

மதுரை ;

திமுகவை விமர்சிக்க  ஈபிஎஸ்க்கு தகுதியில்லை என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 
AM, PM பார்க்காத CM என்ற போஸ்டர் என்னை மிகவும் கவர்ந்தது.

அதாவது காலை, மாலை பார்க்காத சி.எம். அதைவிட நான் MM CMஆக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மினிட் டூ மினிட் சி.எம்.ஆக இருந்து, ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் தமிழ்நாட்டை நெ.1 ஆக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறோம்.

இப்போது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பதவியே தற்காலிக பதவி தான்.  அதிமுக எம்எல்ஏக்களே எடப்பாடி பழனிசாமியுடன் பேசுவதில்லை . திமுக எம்எல்ஏக்கள் பேசப் போகிறார்களா ?  தற்காலிக பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்னொரு கட்சியை விமர்சிக்கிறார்.  அதிமுக தற்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை பேச தகுதி இருக்கிறதா? நானும் உயிரோடு இருக்கிறேன். இந்த நாட்டில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத்தான் , இந்த காமெடி கதைகளில் எல்லாம் அவர் கூறி வருகிறார்.  என்னை பொறுத்தவரை திட்டமிட்டு பரப்பக்கூடிய இந்த பொய் பிரச்சாரத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.  

ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக நான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction