விநாயகர் சதூர்த்திக்கு படைக்கப்பட்ட லட்டை ரூ.24 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அரசியல் கட்சி தலைவர் ….

ஹைத்ராபாத் ;

இந்தியாவில் மிக பிரபலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.. இந்த விழாவில் பல அடி சிலைகள் வைத்து வழிபடுவதும், அதனை ஆற்றிலோ கடலிலோ கரைப்பதும் பல நாட்கள் கொண்டாடப்படுவதும் வழக்கம்.

அப்படி ஹைத்ராபாத் நகரில் பாலாபூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, 1994ம் ஆண்டு முதல் ஏலம் விடப்பட்டு வருகின்றது. 1994ல் முதன் முதலாக ஏலம் விடப்பட்டபோது 450 ரூபாய்க்கு விடப்பட்டது. வருடத்திற்கு வருடம் ஏலத்தில் விடப்படும் இந்த லட்டின் விலை மிக அதிகமாகவே இருக்கும்.

கடந்த 2004ல் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக ஏலம் போன இந்த லட்டின் விலையானது, 2010ல் 5.35 லட்சம் ரூபாய்க்கு மேலாக ஏலம் விடப்பட்டது. அதனை தொடர்ந்து 2011ல் 5.45 லட்சம் ரூபாய்க்கும், 2012ல் 7.50 லட்சம் ரூபாய்க்கும் 2013ல் 9.26 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.   2015ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், ஆண்டுக்கு ஆண்டு லட்சக் கணக்கில் விலை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் 21 கிலோ எடை கொண்ட இந்த லட்டு 19.80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 24.60 லட்சம் ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த லட்டினை ஏலத்தில் எடுத்து தங்கள் ஊரில் உள்ள வயல் வெளிகளில் தூவுவதால், தங்கள் ஊர் செழிப்படைவதாக மக்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டில் ஏபி எம்எல்ஏ ரமேஷ் யாதவ் இந்த லட்டினை ஏலத்தில் எடுத்தார். இந்த ஆண்டு டி ஆர் எஸ் தலைவர் வி லக்ஷ்மா ரெட்டி 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விட்டுள்ளார்.


Leave a Reply