ராகுலின் ஆயிரம் பெருசா … மோடியின் லட்சம் பெருசா? ராகுல் ,மோடியின் உடையை மையப்படுத்தி அடித்து கொள்ளும் பாஜகா, காங்கிரஸார்…

சென்னை ;

ராகுல் காந்தி அணிந்திருக்கும் டீசர் எத்தனை ஆயிரம் என்று பாஜகவினர் வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.   பதிலுக்கு காங்கிரசார் பிரதமர் மோடி அணிந்திருக்கும் உடை எத்தனை லட்சம் தெரியுமா என்று பதிவிட்டு வருகின்றனர் .

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.  கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.  150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறார்.   இந்த சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி உடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.

 ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   இந்த நிலையில் பாஜகவினர் இன்று தங்களது டுவிட்டர் பக்கங்களில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு விமர்சித்துள்ளனர்.  

ஒன்று ராகுல் காந்தியின் புகைப்படம்.  மற்றொன்று அவர் அணிந்திருந்தது போன்ற ஒரு டீசர்ட்டின் படம். 

அந்த டி சர்ட்  கம்பெனி,  அந்த டிசர்ட்டின் விலை ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.  அந்த  பர்பரி டி ஷர்ட்டின் விலை ரூ.41.257 என்று உள்ளது.  இந்த பதிவு வைரலாகி வருகிறது.   இதற்கு பதிலடியாக காங்கிரசாரும் பிரதமர் மோடியின் ஆடையை  குறிப்பிட்டு அந்த  ஆடை  பத்து லட்சம் ரூபாய் என்று பதிவிட்டு, ஆயிரங்கள் பெருசா? லட்சங்கள் பெருசா?  என்று  பதிலடி குறித்து வருகின்றனர்.

Leave a Reply