நெய் வைத்து சுலபமாக நெய் சாதம் செய்யலாம் வாங்க……..

தேவையான பொருட்கள் :

அரிசி = 1/2 கிலோ
நெய் = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
நல்லெண்ணெய் = 100 மில்லி
பட்டை ,கிராம்பு = 10 பீஸ்
ஏலக்காய் = 4 பீஸ்
பெரிய வெங்காயம் = 2 பீஸ்

செய்முறை : 1

கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும், அதனுடன் நெய் ஊற்றி, சூடு செய்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து லேசாக கிளறவும், பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை : 2

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நன்கு சுத்தம் செய்த அரிசியை போட்டு 5 நிமிடம் வரை இளம் சூட்டில் வைத்து இறக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவைக்கவும். நன்கு கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி வைக்கவும்.

செய்முறை : 3
அரிசி நன்கு வெந்ததும், ஏற்க்கனவே வதக்கி வைத்த பெரிய வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் கலவையை சாதத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, மேலாக கொஞ்சம் நெய் ஊற்றி நன்கு கிளறவும்.

Leave a Reply