இறாலை பயன்படுத்தி அனைவருக்கும் பிடித்த இறால் கட்லட்!!

தேவையான பொருட்கள் :

இறால் = 500 கிராம்
பூண்டு = 8 பல்
உருளைக்கிழங்கு = 2
பெரிய வெங்காயம் = 2
முட்டை = 3 பீஸ்
பச்சை மிளகாய் = 4 பீஸ்
இஞ்சி = 1 துண்டு
மஞ்சள் தூள் = தேவைக்கேற்ப
மிளகுபொடி = 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை = சின்ன கொத்து
பிரட்தூள் = 1/2 கப்பு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை : 1

முதலில் உருளைக்கிழங்கினை வேக வைத்து, மசியல் செய்து கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவைகளைப் பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு எண்ணெயை ஊற்றி இறால், உப்பு, மஞ்சள் தூள் இவற்றினை சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை : 2

இவை ஆறியதும் இதனை மிக்ஸியில் தண்ணீர் விடாது. அரைத்து மிளகுதூள், எலுமிச்சம் பழச்சாறு. கொத்தமல்லி இலை, மசியல் செய்த உருளைக்கிழங்கு இவற்றோடு வதக்கியதையும் சேர்த்து தேவையான உப்புத்தூளை சேர்த்து மாவினை தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த மாவினை பல்வேறு வடிவங்களில் வைத்து முட்டையை அடித்து பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் நனைத்து பிறகு பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை தக்காளி சாறோடு தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Leave a Reply