தேங்காய் சாதம் இப்படி செய்ங்க விரும்பி சாப்பிடு வாங்க!!

தேவையான பொருட்கள் :


தேங்காய் = 1 முழுவதும்
அரிசி = 2 கப்பு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
முந்திரி = 12 பீஸ்
கருவேப்பிலை = 1 சின்ன கட்டு
கடுகு = 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
கடலை பருப்பு = 3 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்

செய்முறை : 1
முதலில் தேங்காய்யை துருவி வைக்கவும்,முந்திரியை தனியாக நெய்யில் வறுத்து விடவும்,2 கப்பு அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெள்ளை சாதத்தை தயார் செய்து வைத்துகொள்ளவும்.

செய்முறை :2
பாத்திரத்தில் எண்ணெய்ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் தேங்காய் துருவளை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வருத்து எடுக்கவும்.பிறகு கொஞ்சம் தேங்காய் எண்ணெயில் கடுகு போட்டு பொரிய விட்டு கருவேப்பிலை,கடலை பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

செய்முறை :3

இப்போது பாத்திரத்தில் சாதத்தை கொட்டி அதனுடன் வறுத்து எடுத்து வைத்த தேங்காய் துருவளையும்,எண்ணெயில் வதக்கிய கடுகு,கருவேப்பிலை,கடலை பருப்பு ஆகியவற்றையும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கிளறவும்.

சாதம் தயார் ஆனதும் அதை பரிமாறும் பாத்திரத்தில் வைத்து,வறுத்து வைத்த முந்திரியை சிறு சிறு தூண்டுகளாக்கி மேலே தூவி அலங்கரிக்கவும்.

Leave a Reply