அனைவருக்கும் பிடித்த ஆம்லேட் ரைஸ், ஹோட்டல் ஸ்டைல் ல வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க……….

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி = 1/4 கிலோ
வெங்காயம் = 50 கிராம்
கொத்தமல்லி = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
குடமிளகாய் = 2 பீஸ்
முட்டை கோஸ் = 100 கிராம் அளவு
முட்டை = 6 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கேரட் = 50 கிராம் அளவு
வெண்ணெய் (அ) நெய் = 1ஸ்பூன்

செய்முறை : 1

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் (அ) நெய்யை ஊற்றி , காய்ந்ததும் முட்டை கலவையை தோசையாக ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து விரல் நீள அகலத்தில் நாடாக்களாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 2

காரட், முட்டை கோஸ், விதை நீக்கிய குடமிளகாய் ஆகியவற்றை சிறு சிறு தூண்டுகளாக மெல்லியதாக வெட்டி வைக்கவும். வெங்காயம் , கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் (அ) நெய் போட்டு காரட், முட்டை கோஸ், குடமிளகாய் போட்டு புரட்டவும்.

செய்முறை : 3

நறுக்கிய வெங்காயம். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேக வைத்த அரிசி சாதத்தை வதக்கியவைகளுடன் சேர்த்து முட்டை ஆம்லெட் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.சாதம் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction