மீன் பொரியலில் மிளகுதூள் பயன்படுத்தி அருமையான சுவையில் மிளகு மீன் !!

தேவையான பொருட்கள் :

மீன் = 1/2 கிலோ
மிளகுத்தூள் = 1ஸ்பூன்
எலுமிச்சைசாறு= 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
நெய் = தேவையான அளவு

செய்முறை : 1
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும். மீனில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.

செய்முறை : 2
ஒட்டாத கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் தனித்தனியாக மீனை வைத்து . அதன் மேல் உருக்கிய நெய் சிறிது விடவும் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

Leave a Reply