அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு காஸ்பர் ரூட்!!

நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் முதல் இரு செட்களை ரூட் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கச்சனோவ் வென்றார்.

நான்காவது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply