தினமும் முழு போதையில் பள்ளிக்கு வரும் குடிகார டீச்சர் …. டேபிள் முழுவதும் குவார்ட்டர் பாட்டில்கள்… கடும் அதிர்ச்சியில் அதிகாரிகள் …

தும்கூர்;

தினமும் குடித்துவிட்டு போதையில் பள்ளிக்கு வரும் அந்த ஆசிரியை , போதை இறங்கும் போதெல்லாம் மீண்டும் குடிப்பதற்காக வகுப்பறையின் மேஜை டிராயரிலேயே குவாட்டர் பாட்டில்களை எப்போதும் வைத்திருந்துள்ளார்.  மாணவர்கள் மூலம் பெற்றோர்கள் புகார் கொடுக்க அதிகாரிகள் திரண்டு வந்து ஆய்வு நடத்தி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுவுக்கு அடிமையாகிய ஆசிரியை

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது அந்த தொடக்கப்பள்ளி .  இப்பள்ளியில் கங்கலக்ஷ்மி அம்மா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த ஆசிரியை மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்.   தினமும் குடித்துவிட்டு வந்து மாணவர்களுக்கு போதையிலேயே பாடம் எடுத்து வந்திருக்கிறார்.இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.

சில மாணவர்கள் பெற்றோர்களிடம் அவ்வப்போது சொல்லி வந்திருக்கிறார்கள் . பெற்றோர்களும் சக ஆசிரியர்களும் அந்த ஆசிரியையை அவ்வப்போது எச்சரித்து வந்திருக்கிறார்கள் .  ஆனாலும் தொடர்ந்து குடித்துவிட்டு மது போதையிலேயே வந்திருக்கிறார்.  வழுப்பறையில் மேஜை டிராயரில் குவாட்டர் பாட்டில்களை வைத்துக் கொண்டு அடிக்கடி  வகுப்பறைக்குள்ளேயே மது அருந்தி வந்திருக்கிறார்.

இதனால் மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் அளிக்க,  பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்ததன் பேரில் அதிகாரிகள் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு செய்துள்ளனர்.  

அப்போது ஆசிரியை கங்கலக்ஷ்மி அம்மா மது போதையில் இருந்துள்ளார்.  மேலும்,  அவரின் மேஜை டிராயரை திறந்து பார்க்கச் சொல்லி மாணவர்களும் பெற்றோர்களும் வலியுறுத்த அதிகாரிகள் திறந்து பார்த்தபோது,  அதில் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் அதிகாரிகள் .

 கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிரியை மது போதைக்கு அடிமையாகி இப்படி செய்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.  அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply