15 மனைவி, 107 குழந்தைகள் என ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கி ஒரே வீட்டில் வளர்க்கும் கணவர் …. வினோத உலகம்….

கென்யா ;

ஒருவர் 15 மனைவிகள் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவது உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலலுயானா. 61 வயதாகும் இவர் தற்போது வரை 15 மாணவிகளுடன் மகன் – மகள் என 107 பேருடன் வாழ்ந்து வருகிறார். இது குறித்து தற்போது பல ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதன்படி இது குறித்து திருமணம் செய்து கொண்ட டேவிட் கூறுகையில், “சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிங் சாலமன் தான் தனக்கு முன்மாதிரி என தெரிவித்தார். மேலும் அவருக்கு 700 மனைவிகளும், 300 பெண் பார்ட்னர்களும் இருந்தனர். நான் அவரை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை.

நான் நிறைய பெண்களுக்கு விருப்பமானவராக இருக்கிறேன். அவர்கள் கண்ணுக்கு புத்திசாலியாகவும் இருக்கிறேன். அவர்களை சமாளிக்கக்கூடிய யுக்தி எனக்கு நன்றாகாவே தெரியும். அதனால் தான் இத்தனை பெண்களை திருமணம் செய்துள்ளேன்.

இவர்களுக்குள் இதுவரை சண்டை வந்ததே இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்; கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். இன்னும் 10 பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் செய்வேன்” என்றார்.

தொடர்ந்து இது குறித்து அவரது முதல் மனைவியான ஜெசிக்கா கூறுகையில், “எனது கணவர் புதிதாக ஒரு பெண்ணை திருமணம் செய்வதை பார்த்து நான் பொறாமை கொண்டதே இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர்; நல்ல கணவர். அவர் எப்போதும் ஒரு செயலை செய்யும் முன்பு நன்கு யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்” என்றார். என்னவோ போங்கப்பா என்று தான் சொல்ல தோன்றுகிறது …

Leave a Reply