தென்னாப்பிரிக்கா தொடருக்கு மீண்டும் ஷிகர் தவான் கேப்டனா? பிசிசிஐயின் அதிரடி முடிவு!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. முதலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. ஏனென்றால் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அக்டோபர் 9ஆம் தேதி ஆஸ்திரேலியா கிளம்ப உள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே இந்தத் தொடரில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிகிறது.


அத்துடன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அத்துடன் பல இளம் வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்:

செப்டம்பர் 20- முதல் டி20 போட்டி

செப்டம்பர் 23- இரண்டாவது டி20 போட்டி

செப்டம்பர் 25- மூன்றாவது டி20 போட்டி

இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:

செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி

அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி

அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி

அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி

அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி

அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி

முன்னதாக காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்த பும்ரா மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகிய இருவரும் முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடற்தகுதி பரிசோதனையில் தகுதி பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஆகவே டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இவர்கள் இடம்பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று கருதப்படுகிறது.

இதனால் தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா, ராகுல், கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது.

Leave a Reply