கருணாநிதி எவ்வளவோ பரவாயில்ல … ரொம்ப மோசமா பழிவாங்குறாரு மு.க.ஸ்டாலின்…. அதிமுக எம்பி கடுப்பு …

சென்னை ;

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை அடையாரில் உள்ள முன்னாள்  அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்தார்.

அப்போது காவல்துறை அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதாக விமர்சித்த அவர் இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள் ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போடப்பட்டு  சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைப்பதாக  தெரிவித்தார்.

 ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற முக.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார் என்று விமர்சித்தார்.

இன்றைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு  திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துவதாக குற்றம் சாட்டினர்.  

Leave a Reply