கரூரில் பாஜக…கோவையில் திமுக.. தொடரும் போஸ்டர் யுத்தம் … சுவர் அசிங்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் …

கோவை ;

கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் “திருடர் குல திலகமே…ஊழலின் மறு உருவமே… அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்” என்ற வாசகம் இருந்தது.

பின், தராசு தட்டில் ஒரு பக்கம் பணக்கட்டுகளும், மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போல் காட்சிபடுத்தி இருந்தனர். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதை போல், தராசு தட்டு அமைச்சருக்கு பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு போட்டியாக , கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களில், “நோட்டா கிட்ட வச்சுக்கோ…. எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்…” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவையில் போஸ்டர்கள் ஓட்டகூடாது என்றும் மீறி ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ,போலீஸ் ஆணையர் ,மாநகராட்சி ஆணையர் கூட்டாக அறிக்கை விட்டிருந்தனர் …ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு திமுகவினர் கோவை எங்கும்சரளமாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது …ஒருவேளை அதிகாரிகள் உத்தரவு ஆளும் கட்சியினரை கட்டுபடுத்தாதோ என்னவோ …

Leave a Reply