வாரம் ஒரு நாள் மட்டும் தாங்க திருடுவேன்…. அதான் என் பாலிசியே … போலீசையே திணறடித்த திருடன் …

சென்னை:

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இது குறித்து பூந்தமல்லி போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்தனர். எந்த தடையமும் கிடைக்காமல் போலீசார் தினறி வந்த நிலையில் …

நேற்று பூந்தமல்லியில் நள்ளிரவில் சம்பந்தம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். மேலும் அந்த நபரிடம் விசாரித்த போது அவர் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் பிடிபட்ட நபர் செஞ்சியை சேர்ந்த சிவச்சந்திரன்(32), என்பதும் திருவேற்காடு பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரனமாக மனைவியை பிரிந்து சென்ற நிலையில் தனியாக இருந்து வந்துள்ளார்.

மேலும் இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் வாரத்தில் ஆறு நாட்கள் விழுப்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சீருடை மட்டும் அணிந்து கொண்டு செல்வதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும் போலீசார் தன்னை பிடிக்காமல் இருப்பதற்காக தனியார் நிறுவனத்தில் பனிபுரிவது போன்ற சீருடை அணிந்து கொண்டும் இரவு நேர பணிக்கு சென்று வருவதாக கூறி வலம் வந்ததும் தெரியவந்தது. சிவசந்திரனிடமிருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வாரம் ஆறு நாட்கள் நல்ல பிள்ளையாக வேலைக்கு சென்று விட்டு ஒரு நாள் மட்டு திருடனாக வலம் வந்து கொண்டிருந்த இந்த நபரின் செயல் போலீசையே திணறடித்தது சென்று சொன்னால் மிகையாகாது ..

Leave a Reply