மதுபோதையில் பள்ளிக்குள் புகுந்து டீச்சருக்கு பளார் விட்ட ஆசாமி….
புதுக்கோட்டை ;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த டீச்சர் சித்திரா தேவி ஆவார். இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார், மேலும் இவர் அங்குள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் டீச்சர் சித்திரா தேவி வழக்கம் போல பள்ளிக்கு பணிக்குச் சென்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தீடீரென அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் எனும் ஆசாமி மது போதையில் பள்ளிக்குள் புகுந்தார். பிறகு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பள்ளியின் டீச்சர் சித்ரா தேவியை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார், அத்துடன் டீச்சர் சித்திரா தேவியை கொலை மிரட்டல் விடுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து உள்ளனர். பின்னர் அங்கு வந்தவர்கள் சித்திரவேலை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக டீச்சர் சித்ரா தேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வடகாடு போலீசார் சித்திரைவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் புகுந்து டீச்சருக்கு மதுபோதை ஆசாமி பளார் விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது