இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண்ணின் கால் மீது ஏறிச் சென்ற லாரி… அதிர்ச்சி வீடியோ …

திருச்சூர் ;

கேரள மாநிலம் திருச்சூர் ,குன்னுங்குளம் பகுதியை அடுத்த கிழக்கே கோட்டாவில் இன்று காலையில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, முந்த முயன்ற லாரியின் பக்கவாட்டுப்பகுதி உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் நிலை தடுமாறு சாலையில் விழுந்துள்ளனர். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் பெண் ஒருவரின் கால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் இவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பெண்ணின் கால் மீது லாரி ஏறி இறங்கும் பதற வைக்கும் வீடியோ காட்சி

இது குறித்து திருச்சூர் போலீசார் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் புத்தூர் பகுதியை சார்ந்த கணவன் மனைவியான ராமச்சந்திரன் மற்றும் ரதி என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் லாரி டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.இந்த நிலையில் விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply