துரோகியின் ஏஜெண்டாக இருப்பதை விட இது எவ்வளவோ பெஸ்ட்.. மகாராஷ்டிரா முதல்வர் கருத்து …

மும்பை ;

சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே மும்பையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது:

யாகூப் மேமன் ஒரு துரோகி. அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது கல்லறை மகிமைப்படுத்தப்பட்டது. இது யாருடைய ஆட்சியில் நடந்தது?.

துரோகியின் ஏஜெண்டாக இருப்பதை விட இது எவ்வளவோ பெஸ்ட்.

யாகூப்  மேமன் என்ற துரோகியின் ஏஜெண்டாக இருப்பதை விட மோடி மற்றும் அமித் ஷாவின் ஏஜெண்டுகளாக இருப்பது எவ்வளவோ பெஸ்ட் . அவர்கள் பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மற்றும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் என்ற துரோகியின் கல்லறை மார்பிள் கல் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் மூலம் புனரமைக்கப்பட்டு, அழகுப்படுத்தியிருப்பதாக  தகவல் வெளியானது. அந்த கல்லறையில் எல்.இ.டி. விளக்குகள் கடந்த மார்ச் 18ம் தேதி நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி அரசாங்கம்  ஆட்சியில் இருந்தது என்று பேசினார் .

Leave a Reply