கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை அகற்ற உதவும் பீட்ருட் ஜூஸ் !!

கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை அகற்ற உதவும் பீட்ருட் ஜூஸ் !!

பீட்ருட் ஜூஸ் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது .இது நமது மூளையின் செயல்பாட்டுக்கு சிறந்த பானமாகும் .மேலும் உங்கள் இரத்த நாளங்களை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கும் பீட்ரூட் ஜூஸ் ஆரோக்கியமான பானமாகும்.

பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் சுவையும் கூடும்.

பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது . இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறைவதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

பீட்ரூட்டில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது.

Leave a Reply