சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சு என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலைசெஞ்சாதான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும்.. தமிழக அமைச்சர் கிண்டல் …

சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சு என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலைசெஞ்சாதான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும்.. தமிழக அமைச்சர் கிண்டல் …

சென்னை : 

பள்ளிகளுக்கான இலச்சினை(லோகோ) மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என் நேரு, மா சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

அமைச்சர் கே.என் நேரு பேச்சை தொடங்கினார். அப்போது ’ மேயர் பெயரை விட்டுவிட்டதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். அதற்கு அமைச்சர் நேரு, வந்ததில் இருந்து நீ ஒரு மாதிரி தான் இருக்க. மேயர் பத்தி ஏற்கனவே பேசினேன். அதனை டிவி ல போட்டுட்டான். மேயரை நான் முதலிலேயே வரவேற்று விட்டேன் என்றார்.

சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சு என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலைசெஞ்சாதான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும்.

மேலும் ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சரின் பணியை கண்டு வியப்படைந்தது உண்டு.

சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும் மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும் என பழமொழி கூறி கிண்டல் செய்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம்.

மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும். சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

முன்னோடி மாநிலமான மஹாராஷ்டிரா மாநகராட்சிக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Leave a Reply